கிழக்கில் இனிமேல் வலயங்களில் மாகாணக் கூட்டம்


(V.T.சகாதேவராஜா,& ச.சுரேந்திக்கா) திருகோணமலையில் மட்டும் இதுவரை காலமும் நடைபெற்று வந்த கிழக்கு மாகாண வலய பணிப்பாளர்களுக்கான கூட்டம் இனிமேல் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் திட்டமிடப்பட்டது போல் (17வலயங்களிலும்) சுழற்சியாக நடைபெறும் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A.நிசாம் தெரிவித்தார்.

 இக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறும் எனவும். முதலாம் நாள், குறித்த வலயத்தில் முதல் நாள் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாடசாலை மேற்பார்வையும், அவ் வலயத்திலுள்ள ஆசிரியர்களுக்கான நடமாடும் சேவையும் நடைபெறும். மறுநாள் பாடசாலை மேற்பார்வையும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் மாதாந்தக் கூட்டமும் இடம்பெறும். இதன்படி முதலாவது கூட்டம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 4ம்,5ம் திகதிகளில்(நாளையும் நாளை மறுதினமும்) இடம் பெறும் என மாகாண பணிப்பாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.