(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை திருத்தியமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
கிராண் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகை கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அனர்த்த முகாமைத்து அமைச்சரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த பெறுமதிவாய்ந்த கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் கே.சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












