மாகாண சபை உறுப்பினருக்கு எங்கள் நன்றிகள் - பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயம்.

கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்பித்து கொண்டிருந்த ஆசிரியர் இடமாற்றம் பெற்று சென்றதினால், அப் பாடசாலையின் தரம் 5 மாணவர்களுக்கான ஆசிரியர் இன்றி இயங்கி வந்தது தொடர்பில் பாடசாலை அதிபர் டேவிட் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு வந்தார். 

மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்ட மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் முயற்சியினால் இடம் மாற்றலாகி சென்ற ஆசிரியரின் இடமாற்றலை இரத்து செய்து மீண்டும் அதே பாடசாலையில் பணியினை தொடர் ஆவண செய்தார். இது தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்  மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கட்க்கு நன்றி தெரிவித்ததுடன், பாடசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் எடுத்து கூறியுள்ளார். இதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு செல்வத்தோடும், தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் பாடசாலை அதிபரிடம் மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்கள் உறுதியளித்துள்ளார்.