ராணமடு இந்து மகா வித்தியாலயத்திற்கு மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்.

அம் / ராணமடு இந்து மகா வித்தியாலயத்திற்கு 21.03.2013 வியாழக்கிழமை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன், கலையரசன் மற்றும் நாவிதன் வெளி பிரதேசசபை தவிசாளர் சி . குணரெத்தினம், நாவிதன் வெளி பிரதேசசபை உறுப்பினர்   பிள்ளையான்தம்பி ஆகியோர் சென்று அப் பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தனர்.

அப்பாடசாலையின் அதிபர் மார்க்கண்டு அவர்கள் நாட்டியம் மற்றும் சங்கீதத்திற்கான ஆசிரியர்களும், விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் ஒருவரும் தேவையாக இருப்பதையும், பாடசாலை வளாகத்தை சுற்றி மதில் அமைக்க வேண்டிய அவசியத்தையும் குறைபாடாக சுட்டிக்காட்டியதுடன் இப் பாடசாலை ஆயிரம் பாடசாலை திட்டத்தினுள் இணைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக முதற்கட்டமாக வலயக்கல்விப்பணிப்பாளரை கலந்தாலோசித்து பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைகளை தீர்த்துத் தருவதாக உறுதி அளித்தனர். பாடசாலைக்குச் சென்றிருந்த உறுப்பினர்கள்.