(உ.உதயகாந்த்)
தேசத்திற்கு மகுடம் நிகழ்வினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தில் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட திறன் அபிவிருத்தி பிரிவு கட்டிடமானது அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக அவர்களின் அன்புக்கரங்களினால் இன்று 2013.03.25 ஆம் திகதி சுபமுகுர்த்தத்தில் திறந்துவைக்கப்பட்டது.
இத் திறன் விருத்தி அலகானது நாற்பத்து ஒரு லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டதாகவும், இருபது கணணி இயந்திரங்களை உள்ளடக்கியதாகவும் அமையப்பெற்றுள்ளது எனவும் இவ் அலகின் ஊடாக அம்பாறை மாவட்ட செயலகத்திற்குட்பட்ட அரச அலுவலகங்களின் அரச அலுவலகர்கள் இங்கு சிறந்த பயிற்சிகளைப் பெற்று தங்களது திறனை விருத்தி செய்வதனூடாக பொது மக்களிற்கு சிறந்த திருப்திகரமான சேவையினை வழங்கலாம் எனவும் அதற்காகவே அம்பாரை மாவட்டத்திற்கு இத்திட்டத்திற்காக அதிகளவிலான நிதியினையும் ஓதிக்கித்தந்தோம் என அமைச்சர் நவீன் திசாநாயக அவர்கள் தனது உரையில் கூறினார்.
இந் நிகழ்வில் திகாமடுல்லை மாவட்ட அமைச்சர் தயாரத்ன , அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் , ஏனைய அரச அலுவலகங்களின் உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.












