(கிருஸ்ணா)

சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சாயி பஜனையில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
காரைதீவைச்சேர்ந்த சீவரெட்னம்(65வயது)என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இன்று திங்கட்கிழமை அதிகாலை வரையில் காரைதீவு சாயி சமித்தியில் பஜனைகள் இடம்பெற்றுவந்துள்ளது.
இதன்போது குறித்த நபர் பஜனையின்போது டொல்கி வாசித்துள்ளார்.இந்நிலையில் அவர் வாத்தியக்கருவியினை வாசித்துக்கொண்டிருக்கும்போது இருந்தவாறே சரிந்து வீழ்ந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக காரைதீவுப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.