(தம்பையா)அம்பாரையில் இடம்பெற்றுவரும் தெயட்ட கிருல தேசத்திற்கு மகுடம் கண்காட்சி சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சியின் செயலாளர் தெரிவித்தார்
அம்பாரை ஹாடி தொழில் நுட்பக்கல்லூரியில் இடம்பெற்றுவரும் இக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைய இருந்துள்ளபோதும் இதனை பார்வையிட்டுவரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளதால் நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை கண்காட்சி நடைபெற நீடிக்கப்பட்டுள்ளது












