(ச.சுரேந்திக்கா) இலங்கை உயர்கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்திப் பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் கிழக்குப் பல்கலைக்கழகம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
இப் போட்டியில் இலத்திரணியல் ஊடகம், சினிமா, இலக்கியம்,மேடை நாடகபிரதியாக்கம், இசை நாடகம், சித்திரம், புகைப்படம் ஆகிய துறைகளில் தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு வேறாகவும் சிங்கள பல்கலைக்கழகங்களுக்கு வேறாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டது.
இந் போட்டி நிகழ்வு கடந்த 21ம் திகதி கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. இப் பல்கலைகழக சார்பில் போட்டிக்கான இணைப்பாளராக விரிவுரையாளர் வண.பிதா.A.A.நவரெட்ணம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இப்போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களான த.கஜீறியா- குறுநாடகப் போட்டியிலும், S.பிரதீப்- நெடுநாடகம் போட்டியிலும், P.காளீஸ்வரன் மற்றும் K.அஞ்சலின் கிஷோபா-இசை போட்டியிலும் 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழும் தலா ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
அடுத்ததாக,T.சசிதரன்-நடனப்போட்டியிலும், K.ஜெயசீலன்-குறு நாடகப் போட்டியிலும், P.சுரேந்திரன்-நெடு நாடகப் போட்டியிலும் 2ம் இடத்தினைப் பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ்களும் தலா 75 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
T.தஜீறியா-நெடு நாடகப் போட்டியிலும், M.கேதீஸ்வரன்-குறுநாடக போட்டியிலும், V.றெஜினோல்ட்-பாடலாக்கம் போட்டியிலும், K.சரிதா-சிறுகதைப் போட்டியிலும் 3ம் இடங்களைப் பொறறுக் கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ்களும் தலா 50ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
இப் போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் முதலாம் இடத்தினை வெற்றி பெற்றதற்காக கிழக்கு பல்கலைக்கழகத்தால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.












