மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று விசேட பூசைகளுடன் அறநெறி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று விசேட பூசைகள் நடைபெற்றதுடன் அடியார்கள் பலர் விரதம் அனுஸ்டித்தனர். இரவு முழுவதும் நான்கு சாமப் பூசைகள் நடத்தப்பட்டதுடன் அறநெறி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஸ்ரீ சித்திரவேலாயுதா அறநெறி மாணவர்களினால் கும்மி, பஜனை, பேச்சு, நடனம், பரதம், சைவசமய வினா விடைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன் மேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையினரால் பாடசாலை உபகரணங்கள் பரிசுப்பொருளாக வழங்கிவைக்கப்பட்டது.


























