இத்தகவலை கேள்வியுற்ற மாகணசபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் அவர்களும் கலையரசன் அவர்களும் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் விஜயரத்தினம் அவர்களும் இன்று அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளை பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
இதன் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் சென்று கடமையிலிருந்த பதில் பொலிஸ் அதிகாரியிடம் தமது கண்டனங்களை தெரிவித்ததோடு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்கள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுடன் தொலை பேசியில் தொடர்பினை மேற்கொண்டு இவ் விடயம் தொடர்பில் விளக்கி விசாரணையை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரியிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.












