(ஜெயா)
மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தில் தவக்காலத்தின் பெரிய வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு அருகில் இருந்து சின்ன லூர்து ஆலயத்தின் பங்குத்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்திலே மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு தான் இயேசு பனிரென்டடு சீடர்களுக்கு தன் உடலையும் இரத்தத்தையும் பகிர்ந்தளித்து திருப்பலியை உறுதியுள்ளதாக்கி குருத்துவத்தின் மகத்துவத்தை கூறும் அந்த பெரிய வியாழனும், இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாவிகளுக்காக தாம் இரத்தம் சிந்தி பாடுகள் பட்டு மரணித்த அந்த பெரிய வெள்ளியையும் உலகத்தில் உள்ள எந்தக் கிறிஸ்தவனும் மறுக்க முடியாததும் மறக்க முடியாததுமான ஓர் உண்மை சம்பவமாக எண்ணி எண்ணி வாழ்வதை இன்றைய வெள்ளி ஒரு உன்னத வெள்ளியாக, பெரிய வெள்ளியாக உலகத்தில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளும் ஒரு பெரிய வெள்ளியாக நினைவு கூரப்படுகின்றது.
வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் வந்த போதும் உலகோர் அனைவரும் பொரிய வெள்ளி என இதை குறிப்பிட காரணமாக இருந்தவர் எங்கள் அன்பு இயேசப்பாவின் இறப்பே தான் காரணம். அதை நினைவாக எண்ணி தவக்கால தூய்மையை நாமும் அனுபவிக்க நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தில் பங்குத்தந்தை ஓ.ஐ.ரஜீவன் பெரிய வியாழன் பெரிய வெள்ளியை தூய்மையுள்ளதாக்கி தம்மக்களும் இன்றும் இறைபக்தியிலும் நம்பிக்கையிலும் வாழ்வதை திருச்சிலுவைப்பாதை வழியாகவும், சீடர்களின் பாதம் கழுவும் சடங்கின் ழூலமும், இராவுணவை ஏற்படுத்தியதன் மூலமும் திருப்பலியில் நிறைவேற்றினார்.
இத்திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர், பெரிய வெள்ளியன்று நடைபெற்ற சிலுவைப்பாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இயேசுவின் இறப்பின் பின் உயிர்ப்பு தின திருப்பலி சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு மிக மிக ஆர்ப்பரிப்புடன் நிகழவுள்ளன.
இத்திருப்பலியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பங்குத்தந்தையும். பங்குச்சபை உறுப்பினர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












