(கிருஸ்ணா)
உயர்கல்வி
அமைச்சின் விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்தி பிரிவினால் இலக்கியம்,
மேடைநாடகம், திரைப்படம், இசை, நடனம், திரைக்கதை வசனம், சித்திரம்,
இலத்திரனியல் ஊடகம், புகைப்படம் போன்ற பிரிவுகளின் கீழ் பல்கலைக்கழகங்கள்
மற்றும் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த 'கவிதா" (TALENT ) நிகழ்வில் மட்டக்களப்பு உயர்
தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் சார்பில் பல மாணவ மாணவிகள் இப்போட்டிகளில்
பங்கெடுத்து தமது ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தினர்.
இதில் கடந்த 21ம் திகதி கொழும்பு தாமரைத்தடாக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'கவிதா" (TALENT
) இறுதி நிகழ்வில் திரைப்படம்(சினிமா) பிரிவில் சிறந்த குறும்திரைப்பட
இயக்குனருக்கான போட்டியில் “என் உயிர் நண்பன்” குறும்;படத்துக்காக
கணக்கியல் துறையில் (HNDA) 3ம் வருடம் கல்விகற்கும் சதானந்தம் வேணுதரன்;
2ம் இடம் இடத்தினையும் 75 ஆயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவக இணைப்பு அதிகாரி ள.ஜெயபாலன் கருத்து தெரிவிக்கையில,;
அகில இலங்கை ரீதியில் இவ்வாறான ஒரு விருதை பெறுவது சிறந்த விடையம். என்றும் இத்த குறும்படம் ஒரு சிறிய
Digital camera மூலம் படமாக்கப்பட்டது என்றும் இதில்
Editing, Cinematography இயக்கம் என அனைத்து வேலைகளையும் வேணுதரனே மேற்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4
















