தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டியில் மருதம் இல்லம் வெற்றிபெற்றுள்ளது.

கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் வே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகமும் கௌரவ சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் பூ.பாலச்சந்திரனும் கலந்துகொண்டனர்.

இங்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி அனைவரது கவனத்தையும் வெகுவாhக ஈர்த்தன.