செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இஞ்சி அறுவடை செய்யப்பட்டது!


செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் விதைக்கப்பட்ட இஞ்சி நேற்றைய தினம் அறுவடை செய்யப்பட்டது.


புதிதாக பதவியேற்ற செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் பிரதேச செயலக வளாகத்தில் தோட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.

இந்த தோட்டத்தில் இஞ்சி, கொச்சி, கத்தரி, பப்பாசி, கறிகொச்சிக்காய், போன்ற பல்வேறு பயிர்வகைகளும், பல வகையான பூ வகைகளும் நடுகை செய்யப்பட்டது.அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த தோட்டம் தற்போது பயன் தரத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் இந்த தோட்டத்தில் இருந்து இஞ்சி  அறுவடை செய்யப்பட்டது.