மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி


(ச.சுரேந்திக்கா)  மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி  இந்துக் கல்லூரி பாடசாலை மைதானத்தில் இன்று 7ம் திகதி மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ் விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் K.அருட்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது நான்கு இல்லங்களுக்கடையில்  போட்டிகள் இடம்பெற்றது. இதில் "ராஜகாரியன்" இல்லம் 172 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், "நல்லையா" இல்லம் 225  புள்ளிகளைப் பெற்று இரன்டாம் இடத்தினையும், "குணசேகரம்"  இல்லம் 246 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. இப் போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் ,சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சு.சக்கரவத்தி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் பல பிரமுகர்களும் அரச அதிகாரிகளும் , அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் இந் நிகழ்வுக்கு வருகைதந்திருந்தனர். 




























<