(சுரேந்திக்கா&கிருஷ்ணா )தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்படும் சைக்கி ஓட்படப்போட்டிகளில் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று காலை 11 மணிக்கு மட்டக்களப்பில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் ஆரம்பமான இவ் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டியில், இலங்கையின் பிரபல சைக்கிள் ஓட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நகரில் ஆரம்பமான இச் சைக்கிள் ஓட்டப்போட்டி அம்பாறையில் நிறைவு பெறுகிறது. இதற்கான பரிசுகளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது.
தேசத்தின் மகுடம் கண்காட்சியை முன்னிட்டு இலங்கை சைக்கிள் ஓட்டச் சங்கத்துடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இவ் சைக்கிள் ஓட்டப்போட்டியினை நடத்துகின்றன.
இதன் போது, விமானப்படையின் மட்டக்களப்பு கப்ரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து அம்பாறை வரை பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி