அவசர இயற்கை அனர்த்த புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு


(ச.சுரேந்திக்கா)  மட்டக்களப்பு பிராந்திய  மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக அவசர அனர்த்தபுனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல நிர்ப்பாசனக் குளங்களும், வாய்க்கால்களும் புனரமைக்கப்படவிருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய  நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகத்தினுடாக அறிய முடிகின்றது. 

இதில் கடுக்காமுனைக் குளம் 20 இலட்சம் ரூபா செலவிலும், அடைச்சகல் குளம் 20 இலட்சம் ரூபா செலவிலும்,  தாமரைக் குளம் 16 இலட்சம் ரூபா செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன. அத்துடன் சேதமடைந்துள்ள கடுக்காமுனை குளத்தின் அணைக்கட்டு ஒரு கோடி ரூபா செலவிலும் , தரவைக் குளத்தின் பிரதான வாய்க்கால்  50 இலட்சம் ரூபா செலவிலும் மதுரங்கேணி குளத்தின் வாய்கால் 50 இலட்சம் ரூபா செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.