(கிருஸ்ணா)
தேசத்திற்கு மகுடம் நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இன்று காலை 09.30 மணியளவில் மட் இந்துக் கல்லூரி மைதானத்தில் அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் திருமதி ஜே. கலாராணி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அதிதிகளாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராஜா மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோரும் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மற்றும் கிரிக்கட் வீர வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக அணிகள் தெரிவு செய்யப்பட்டு அணிக்கு ஆறு பேர் கொண்டு 05 ஓவர்கள் (ஒரு ஓவரில் 05 பந்துகள்) மட்டுப்படுத்தப்பட்டதாக இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












