களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு பாதைச் சீர்கேடு


மட்டக்களப்பின் மேற்குபிரதேச மக்கள் பயன்படுத்தும் பாதைகளில் ஒன்றான பட்டிருப்பு களுவாங்சிகுடிப் பாதையும் ஒன்றாகும். இப் பாதையில்தான் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை, பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், சந்தை , மிருக வைத்திசாலை என்பன அமைந்து காணப்படுவதுடன் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு போன்ற நகரங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் பிரயாணிகளும் பயணம் செய்யும் பிரதான பாதையாக காணப்படுகிறது. அத்துடன் மண்டூர் வைத்தியசாலையில் இருந்து அம்பியுலன்ஸ் வண்டி மூலம் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளைக் கொண்டு வரும் பாதையாகவும் இப் பாதை காணப்பட்டபோதும் இதனை திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொண்டபோதும் வேலைகள் மந்தமாக நடைபெறுவதால் பிரயாணிகளும் நோயாளிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். அத்துடன் இப் பாதையில் பயணம் செய்யும் வாகனங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே இப் பாதையை உரிய காலத்தில் திருத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.