தேசத்துக்கு மகுடம் கிறிக்கட் போட்டியில் மகாஜனக் கல்லூரி பெண்கள் அணிக்கு 1ம் 2ம் இடங்கள்


(மா.சசி)
தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பவற்றினுடாக கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று இடங்கள் கிடைத்துள்ளது.

மாவட்ட மட்டங்களில் நடாத்தப்பட்ட போட்டியில் தெரிவான முதலாம் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் பொலனறுவை,திருகோணமலை,மட்டக்களப்பு ,அம்பாரை மாவட்ட அணிகள் மோதிய அணிக்கு ஆறுபேர் கொண்ட கிறிக்கட் சுற்றுப் போட்டி அம்பாரை பொது விளையாட்டு மைதானத்தில் புதன் கிழமை இடம்பெற்றது.


இப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி பெண்கள் பிரிவில மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி இளைஞர் கழக பெண்கள் அணி இரண்டு கலந்துகொண்டதுடன் ஆண்கள் பிரிவிலும் மண்முனை வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த கோட்டமுனை இளைஞர் கழக அணியும் கல்லடி வேலூர் இளைஞர் கழக அணியும் கலந்து கொண்டது.

இப் போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி பெண்கள் ஏ அணி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டதுடன் மகாஜனக் கல்லூரி பெண்கள் வீ அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் சிறந்த துடுப்பாட்ட வீராங்கணை சிறந்த பந்து வீச்சாளர்,சிறந்த துடுப்பாட்ட வீராங்கணை ஆகிய மூன்று இடங்களையும் இவ் அணியினர் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.இதே வேளை ஆண்கள் பிரிவில் அம்பாரை மாவட்ட கல்முனை தமிழ் பிரிவு அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் மட்டக்களப்பு கோட்டமுனை இளைஞர் கழக அணியினர் இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இறுதியில் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்டு பரிசில்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இதன் போது சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட அணியினருக்கு ஐம்பதனாயிரம் பணப்பரிசுகளும் இரண்டாமிடங்களைப் பெற்ற அணியினருக்கு முப்பதனாயிரம் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டது.இதே வேளை சிறந்த பந்துவீச்சாளர்,சிறந்த துடுப்பாட்ட வீர வீராங்கணைகள் சிறந்த ஆட்ட நாயகர்களுக்கு தலா பதினையாயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதே வேளை மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் இதன்போது பரிசு வழங்கப்பட்டது.முதலாமிடத்துக்கு பதினையாயிரம் ரூபாவும் இரண்டாமிடத்துக்கு பத்தாயிரம் ரூபாவும் சிறந்த ஆட்ட நாயகன் ,சிறந்த பந்துவீச்சாளர்,சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.