உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த 69 வயதான வடிவேல் புண்ணியமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிராம சேவையாளரான பி.பாலேந்திரா தெரிவித்தார்.
இந்த வயோதிபர் தனது தோட்டத்தில் எள்ளுத் தானியத்தை பயிரிட்டுக் கொண்டிருந்தபோது பரந்த வயல் வெளிகளுக்கூடாக தன்னந்தனியனாக வந்த யானை இவரைத் தாக்கி ஸ்தலத்திலேயே கொன்று விட்டுச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மேற்படி யானையின் தாக்குதலுக்குள்ளான வயோதிபருக்கு கண்பார்வையும் தெளிவில்லாமல் இருந்ததினால் அவரை நெருங்கிய யானையை அவர் கண்டு கொண்டிருக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். சடலம் தற்சமயம் அவரது எள்ளுத் தோட்டப் பகுதியிலிருந்து வாழைத் தோட்டத்திலுள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த இருவார கால பகுதியில் கொல்லப்பட்ட இரண்டாவது நபர் இவராகும். கடந்த 16.02.2013 திகதி உப்பூறல் கிராமத்தில் 60 வயதான தங்கராசா பூமணி எனும் வயோதிப பெண் யானையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












