நெல்வேளாண்மையில் ஏற்பட்ட நஷ்டத்தினால் விவசாயியொருவர் தற்கொலை


(பே.சபேஷ்)

மட்டக்களப்பு  வந்தாறுமூலை பிரதேசத்தில் நெல்வேளாண்மையில் ஏற்பட்ட நஷ்டத்தினால் விவசாயியொருவர் தற்கொலை செய்துள்ளார்.

வந்தாறுமூலை செட்டியார் வீதியைச் சேர்ந்த 67 வயதான கண்ணப்பன் மார்க்கண்டு என்பவரே தற்கொலை செய்துள்ளதாகவும் சடலம் அவரது குடிசையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை பகல் மீட்கப்பட்டதாகவும்  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்


நேற்றிரவு சாப்பிட்டு விட்டு அவர் தனது குடிசைக்குத் திரும்பியதாகவும் காலையில் வளவின் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தபோது வேலியால் புகுந்து உள்ளே நுளைந்து குடிசைக்குள் பார்த்தபோது அவர் இறந்து கிடந்ததைக் கண்டதாக இவரது மரண விவாரணையின் போது சாட்சியமளித்த மனைவி அருணாச்சலம் அருளம்மா (வயது 55) தெரிவித்துள்ளார்.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மற்றும் ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர்  ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டெடுத்தனர்.

சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டு வைத்திய அதிகாரி கா.சுகுமார் பரிசோதனை நடத்தித்தி அறிக்கை சமர்பித்தார். ஆறிக்கையை பார்வையிட்ட ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தற்கொலை என தீர்பளித்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
 இறந்தவர் தனது நெற்செய்கை சமீபத்திய தொடர் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது பற்றியும் அதனால் கடனிலிருந்து மீள முடியாமல் அவர் கவலையோடு காலங்கழித்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதேவேளை அவர் நேற்றிரவு மதுபோதையில் காணப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.