(மா.சசி)வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்குகொண்டதுடன் விசேட பூசைகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மகா சிவராத்திரி தினமான நேற்று இரவு நான்கு சாமப் பூசைகளும் ஸ்நபனாபிசேசங்களுடன் வெகு விமர்சையாக இடம்பெற்றதுடன்; அடியார்களால் சிவலிங்கப் பெருமானுக்கு பால் அபிசேகம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது
.
இதனை இட்டு ஆலய முன்றலில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட கலை அரங்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பெல்வூட் நுண்கலைக் கல்லூரியின் இசை விரிவுரையாளர் கலை வாணம் இசையருவி விஸ்வநாதன் சதானந்தமும் அவருடைய இசைக்குழுவினராலும்; பக்தி கான நடனவிருந்தும் தேத்தாத்தீவு தேனுகா கலைக் கழகத்தின் வில்லுப் பாட்டு,,கால சமகாரம் நாடகம்,நடனம் என்பனவும் இடம்பெற்றது.
ஆலய தலைவர் பூ.சுரேந்திரராஜா வண்ணக்கர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆலய பிரதம குருவின் ஆசியுரையினைத் தொடர்ந்து மருத்துவர் இல்லாத மருத்துவம்,சித்தவைத்தியர் யோகராசா முகுந்தனின் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிருவாகப் பணிப்பாளர் மனுல பெரேரா தெசிய இளைஞர் வேவைகள் மன்றத்தின் பெல்பூட் இசைக் குழுவினருடன் கலந்து சிறப்பித்தார்.இதன்போது பட்டிப்பளைப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் நிருவாகப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்த்க் கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஈதசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணி,ஆலயப் பொருளாளர் பா.சபாரெத்தினம் வண்ணக்கர்,ஆலய செயலாளர் இ.சாந்தலிங்கம் வண்ணக்கர் ,பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன்,மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் தெ.சசிகரன் ஆலய நிருவாகிகள் கலந்து சிறப்பித்தனர்.





























