(Suren )கிழக்கு மாகாணத்தின் கடைசி எல்லைக் கிராமமான பாணமை கிராம இப்பாடசாலை கல்முனைக் கல்வி மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயதிற்குட்பட்ட பாடசாலைகளுள் அதிகதூரத்திலுள்ள பொத்துவில் கோட்டத்தின் அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலையாகும். இதில் தற்பொழுது 9 ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று கற்பித்து வருகின்றனர்.
இப்பாடசாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டிருந்து 2001 முதல் திருமதி.எஸ்.சோபியாதர்மதாச அவர்களால் பொறுப்பேற்கப்பட்டு இன்று தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களில் 103 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
நாவலர் , பாரதியார் இரு இல்லங்களாக பிரிக்கப்பட்டு 2013.03.07 ஆம் திகதி அதிபர் தலைமையில் பாணமை பொது மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.வ.ஜெயந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதியாக வைத்தியர் டி.எ.எ. வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக லகுகல தவிசாளர் திரு.ஆர்.சந்திரசேன முன்னாள் தவிசாளர் ஜே.எஸ்.டி.உம். நிரோசன் குமார திரு.வி.எஸ்.எம்..சந்திரரத்ன முப்படைகளின் பாணமை பகுதி பொறுப்பதிகாரிகள் பாணமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக வண.வீ.கணோசமூர்த்தி அவர்களும் சித்தி விநாயகர் ஆலயம் பாணமை திரு.எஸ்.புனிதராஜன் பொது சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பாணமை கிராமசேவகர்களான திருமதி.ஜி.ஞானவெத்தி திருஆர்.ரணசிங்க திரு.எஸ்.எம்.ரத்னபால ஆகியோரும் லகுகல பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி.கே.லலித்குணநாயக்க திரு.ஜி.விமலசேன ஆகியோரும் நடுவர்களாக ஆசிரியர்கள் திரு.உ.காண்டீபன் திரு.அ.மனோரன் திருமதி.எஸ்.கோமதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.




















