இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சங்கரப்பிள்ளை தாமரைச் செல்வி என்ற 13 வயதான சிறுமியே பாம்புத் தீண்டுதலுக்கு உள்ளானவராவார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த சிறுமி மீது பாம்பு தீண்டியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.உடனடியாக சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட மழையுடன் கூடிய காலநிலையை தொடர்ந்து இந்த பகுதியில் பாம்புகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஐந்து நபர்களை இந்த பகுதியில் நடமாடுகின்ற பாம்புகள் தீண்டியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது












