முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 121வது ஜனன தினத்தை முன்னிட்டு காரைதீவில் விபுலானந்த பணி மன்றத்தினரும் இந்துசமய விருத்திச் சங்கத்தினரும் ஏற்பாடு செய்த ஜனனதினவிழா நேற்று புதன்கிழமை காரைதீவில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு இந்து சமய விருத்திச் சங்க செயலாளர் கே.ஜெயராஜினால் பஞ்சராத்தி காட்டப்பட்டு வேதபாராயணம் ஓதப்பட்டு அருகிலுள்ள சுவாமி பிறந்த வீட்டில் விசேட பூஜை நடைபெற்று மணிமண்டப நூலகம் தவிசாளர் செ.இராசையாவினால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் விபுலமுனியின் அழகுரத பவனி தேரோடும் வீதிவழியாக பவனிவந்தது.அதன்போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.
(வி.ரி.சகாதேவராஜா)
(வி.ரி.சகாதேவராஜா)
























