இவ் விழாச் சபை அமைக்கும் ஆரம்பக் கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அவர், உலகத்தில் தமிழ் ஆய்வில் ஈடுபட்டிருந்த உள் நாட்டவர்களையும், பிறமொழி பேசும் வெளிநாட்டு அறிஞர்களையும் ஒன்று திரட்டி உலகத் தமிழ் ஆய் வுமன்றம் ஒன்றை நிறுவன மயமாக்கிய நிறுவி அதன் வழியாக உல கெங்கிலும் பல மாநாடுகளை நடத்தியவர் தனிநாயகம் அடிகளாவார். ஆங்கிலம், லத்தின்,ஸ்பெயின்ஸ், இத்தாலி, பிரன்சு உள்ளிட்ட மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அவர், 45ஆம் ஆண்டு ஆண்ணாமலைப்பல்கலைக்கழத்தில் தமிழில் பட்டம் பெறுவதற்கான கற்கைகையத் தொடங்கினார் அவரது தமிழ் ஆர்வத்தைப் பார்த்த பேராசிரியர்கள் அவருக்கு எம்ஏ படிப்பினை நேரடியாகவே கற்கச் செய்திருந்தனர். அதன் பின்னர் உலகம் முழுவதும் பயணம் செய்து போர்த்துக் கீசர் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற தம்பிரான் வணக்கம் உட்பட பல நூல்களைக் கண்டுபிடித்ததுடன், போர்த்துகீசு தமிழ் அகராதியையும் வெளிக் கொணர்ந்தார். அவரது உலகப் பயணத்தில், சிலி, பிறேசில், ஈகுவடோர், ஜேர்மனி போன்ற இடங்களெல்லாம் சுற்றி வந்துள்ளார். அப்போது தமிழை அதன் சிறப்பைச் சொல்லுகின்ற தூதுவராக இருந்தமையினால் அவருக்கும் தமிழ் தூதுவர் என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. 64ல் கமிர்சுவலபில் என்கிற செக்கோ சுலாவாக்கிய ஆய்வாளர் ஒருவருடனும், வி.ஐ.சுப்பிரமணியம் என்கின்ற ஆய்வாளருடனும் இணைந்து இணைந்து உலகத்தமிழ்ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஆரும்பித்திருந்தார். அந்த வருடத்தில் கோலாலம்பூரில் முதலாவது தமிழ ஆராயச்சி மாநாட்டை நடத்தியிருந்தார். அதன் பின்னர் 8 மாநாடுகள் நடபெற்றிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைத் தொடர்ந்து தமிழ் ஆய்வு என்பதற்கு அப்பால்அரசிலும் இணைந்ததாக நடைபெறத் தொடங்கின. அதில் தனிநாயகம் அடிகளாருக்கு திருப்தி இருக்கவில்லை என அறிய முடிகிறது. இந்த இடத்தில் தனிநாயகம் அடிகளாரின் ஆராய்வு மனப்பாங்கினை,தமிழ ஆராய்ச்சி நெறி முறைகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தற்போது பல்கலைக்கழகங்களில் கூட தமிழ் ஆய்வுகள் மிகவும் மங்கலான நிலையிலே இருக்கின்றன. அந்த வகையில் அடிகாளாரினை மீண்டும் நினைவு கூருவதன் மூலமாக அவற்றினை மேம்படுத்துவதற்கான ஒர வாய்ப்பாக இந்த விழாவினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். தவத்திரு தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ் முன்னெடுப்பில் மட்டக்களப்பும் இணைந்து கொள்கிறது. பேராசிரயர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆரம்பக் கூட்டத்தில், நூற்றாண்டுவிழா சபை மற்றும் மலர்க்குழுவும் தெரிவு செய்யப்பட்டது. விழாச் சபை, தலைவராக பேராசிரியர் மௌனகுருவும், செயலாளராக ஆனந்தா ஏ.ஜீ.ராஜேந்திரம், துணைச் செயலாளர் ஏ.சீ.பிரான்சிஸ், உபதலைவர்களாக ஏ.எஸ்.யோகராஜா, செல்வி க.தங்கேஸ்வரி. பொருளாளராக கே.அருளானந்தம் ஆகியோரும்இணைப்பாளராக காசுபதி நடராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர். மலர் குழு பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தலைமையில், பேராசரியர் எஸ்.யோகராஜா அடங்கதாக அமைக்கப்பட்டது. இந்த நூற்றாண்டு விழாவினை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது என்றும் அதற்காக பாடசாலை, பல்கலைக்கழக ரீதியில் போட்டிகளை நடத்துவது, அதே போன்று நூற்றாண்டு விழா மலர் ஒன்றினை வெளியிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தனிநாயகம் அடிகளாரின் நோக்கத்தை நிறைவு செய்வனவாக 100ஆண்டு விழாக்கள் அமைய வேண்டும்- பேராசிரியர் மௌனகுரு