(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா சந்தியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 19பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை 11.30மணியளவில் களுவன்கேணி மற்றும் கொம்மாதுறை பகுதியில் இருந்து பாசிக்குடா கடற்கரைக்கு சென்றவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.
இவர்கள் ட்ரக்டரில் சென்றுகொண்டிருக்கும்போது ட்ரக்டர் பெட்டி குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது குறித்த ட்ரக்டரில் பயணம் செய்த கொம்மாதுறை,கலைவாணி வீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் நிதுர்ஷன்(07வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதில் காயமடைந்த 19பேரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ட்ரக்டரின் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.













