
செலான் வங்கிக் கிளைகளின் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் 2012- 13க்கான சிறந்த வங்கிக்கிளையாக மட்டக்களப்பு வங்கிக்கிளை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
விருது பெற்ற முகாமையாளருக்கான வரவேற்று மற்றும் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு செலான் வங்கிக் கிளையில் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு செலான் வங்கிக் கிளை இந்த வருடத்துக்கான சகல கிளைகளிலும் சிறந்த கிளை, தரம்1 கிளைகளில் சிறந்த கிளை, வங்கித்துறை தவிர்ந்த ஏனைய வருமானங்களை ஈட்டிக் கொண்டதில் சிறந்த கிளை ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது.
பணவைப்பு, கடன் வழங்கல், ஏனைய வருமானங்களை ஈட்டுதல், வரிக்கு முந்திய நிகரலாபம், வசூலிக்க முடியாத கடன்களின் அறவீடு, உள்ளிட்ட 5 துறைகளுக்களிலும் சிறந்து விளங்கும் கிளைக்கு சகல துறைகளிலும் சிறந்த கிளை விருது வழங்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை தம்புள்ளையிலுள்ள கந்தலம சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், செலான் வங்கி பணிப்பாளர் எஸ்.நடராஜா மற்றும் பொது முகாமையாளரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கபில ஆரியரத்ன ஆகியோரால் விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக செலான் வங்கியின் பிரிவு- 2 க்கான பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி பி.நிரஞ்சன், கிழக்குப்பிராந்திய முகாமையாளர் முத்ததிஸ்ஸ (முரளி) ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் மட்டக்களப்பிலுள்ள ஏனைய செலான் கிளைகளின் முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்து கெண்டனர்.
மட்டக்களப்பு வங்கிக்கிளை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நேற்று இதற்கான களரவிப்பு வைபவம் நடைபெற்றது., இவ் வைபவத்தில் முகாமையாளர் உள்ளிட்டோர் மேளதாளமம் முழங்க வரவேற்று அழைத்துவரப்பட்டு சிறந்த கிளை விருது பெற்றமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டதுடன் முகாமையாளருக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.செல்வராசா, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்களும் முகாமையாளரைக் கௌரவித்தனர்.






