வாகரை -ஓமடியாமடுவில் பெண்கள் தலைமைதாங்கும், விசேட தேவையுடையோருக்கு 44 வீடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு- வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு கிராமத்தில் போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பம்இ விசேட தேவைக்கு உட்பட்டோரைக் கொண்ட 44 குடும்பங்களின் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மலசல கூடம் உட்பட சுமார் ஐந்து இலட்சத்து எண்பதாயிரம் ருபா பெறுமதியான வீடுகள் கரித்தாஸ் சுவிஸ்லாந்து நிதி உதவியுடன் மட்டக்களப்பு கரித்தாஸ் எகேட் நிறுவகத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்படவுள்ளது. இவ்வீடுகளை கட்டம் கட்டமாக வழங்கப்படும் பணத்தைக் கொண்டு இவ் வீடுகளை வீட்டு உரிமையாளர்களே நிர்மாணிக்கவுள்ளனர். இதன் முதற்கட்டமாக வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஓமடியாமடு கிராமத்தில் நடைபெற்றது. பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு கரித்தாஸ் எகேட் நிறுவகத்தின் இயக்குனர் அருட்பணி கிறைட்டன் அவுட்ஸ்கோண்இ மகாவலி பிரதி முகாமையாளர் எஸ்.கபிலஇ பிரதேச செயலாளர் ஆர். இராகுலநாயகிஇ கிராம சேவகர்இ கிராம அபிவிருத்தி சங்க தலைவர்இ செயலாளர்இ பெண்கள் அபிவிருத்தி சங்க தலைவர்இ செயலாளர்இ நிறுவகத்தின் உத்தியோகஸ்தர்கள்இ கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர். இவ் வீடுகளுக்கான மொத்தப் பெறுமதி 25இ520இ000.00 என ஊடப்பிரிவு பொறுப்பாளர் எஸ்.மைக்கல் தெரிவித்தார்.