இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள் மே மாதம் 4ஆம்திகதி
இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள் எதிர்வரும் மே மாதம் 4ஆம்திகதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் நடைபெறும்.
இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கடந்த 20ஆம்திகதி முதல் 30ஆம்திகதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தலில், போட்டியிடுவதற்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளனங்களின் தலைவர், உப தலைவர், செயலாளர்-1, பொருளாளர், அமைப்பாளர், உதவி அமைப்பாளர், போன்ற பதவிகளில் உள்ளவர்கள் அல்லது இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர்கள் போட்டியிடலாம்.
வேட்பாளர்கள் குற்றச்செயல்ககயில் ஈடுபடவில்லை என்பதற்கான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உறுதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், இளைஞர் சேவை அதிகாரி, பிரதேச சம்மேளனத் தலைவர் அல்லது உப செயலாளர், இளைஞர் கழக தலைவர்களினதும் உறுதிப்படுத்தல் என்பவற்றுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த நாளிலிருந்து மே 2ஆம்திகதி நள்ளிரவு 12 மணிவரையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தேர்தல் நடைபெற்று எதிர்வரும் மே மாதம் 5ஆம்திகதி மாலை 4 மணிக்குப்பின்னர் தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும்.
பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரியான இளைஞர் சேவை அதிகாரி மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் முன்நிலையில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












