(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 50 வருடகாலமாக மின்சாரத்தினை கண்டிராத பகுதிகளுக்கு மின் விநியோகம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட நான்கு கிராமங்களுக்கான மின் இணைப்பே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.
மகிந்த சிந்தனையின் அனைத்து பின்தங்கிய கிராமங்களையும் ஒளியூட்டும் திட்டத்தின் கீழ் இதற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எரிபொருள் மின்சக்தி துறை அமைச்சரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா இதற்காக நிதியொதுக்கீசெய்யப்பட்டிருந்தது.
இதன் இணைப்பு நிகழ்வு இன்று பிற்பகல் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இணைப்பை ஆரம்பத்துவைத்தார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம்,மின்சாரசபையின் களுவாஞ்சிகுடி பிராந்திய அத்தியட்சர் கி.அனுசாந்த,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் போரதீவுப்பற்று பிரதேச இணைப்பாளர்களான சித்திரவேல் மற்றும் விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட விலாத்தோட்டம்,அலியார்வட்டை,பள்ளவட்டை,நாயத்தவட்டை ஆகிய கிராமங்களுக்கான மின் இணைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்கீழ் இப்பிரதேசங்களைச்சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.