மட்டக்களப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி நீதிமன்றில் இருந்து தப்பியோட்டம்


மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதியொருவர் பொத்துவில் நீதிமன்றில் வைத்து இன்று புதன்கிழமை தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலை வழக்கு விசாரணைகளுக்காக பொத்துவில் நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தக் கொண்டுசென்ற போது நீதிமன்றில் இருந்து தப்பி ஓடியுள்ளார். கோமாரியைச் சேர்ந்த கிறிஸ்ரி என்று அழைக்கப்படும் மகேந்திரராசா சசிகரன் என்ற கைதியே தப்பியோடியுள்ளார்.

மலசலகூடம் செல்வதற்கான அனுமதியை பெற்றுச் சென்றபோது சிறைச்சாலை அதிகாரியை தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொத்துவில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.