மாபெரும் திவிநெகும புத்தாண்டு சந்தை அரச அதிபரினால் திறந்துவைப்பு.


சீலாமுனையில்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மாபெரும் திவிநெகும புத்தாண்டு சந்தையினை அரச அதிபர் திறந்துவைப்பு.

(மா.சசி)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட மீள் எழுச்சித் திட்ட அலுவலகமும் மண்முனை வடக்குப்  பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவும் இணைந்து நடாத்தும் திவிநெகும மாபெரும் புதுவருட சந்தையினை இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்  சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் திறந்துவைத்தார்.


மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பதுவருடச் சந்தையினையே அரச அதிபர் திறந்துவைத்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்;ட வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாகவும் சமூர்த்தி திவிநெகுமத் திட்டத்தினுடாகவும்  உற்பத்தி செய்யப்பட்ட பதுவருடக் கொண்டாட்டத்திற்குத் தேவையான பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூபிரசாந்தன்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மீள் எழுச்சித் திட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதித் திட்டப் பணிப்பாளர் எம.குன்றக்குமரன் உட்பட பலர் உயரத்காரிகள் கலந்துகொண்டனர்.

இன்று காலை அரம்பமான இச் சந்தையானது நாளை மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது.