மலருகின்ற தமிழ் புத்தாண்டில் தமிழர்களுடைய கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன். என்று அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருட பிறப்பின் போதும் தமிழ் மக்கள் இவ்வாண்டிலாவது, உரிமை, சுதந்திரம் கிடைக்குமென்றே புத்தாண்டை வரவேற்றுக்கொண்டு இருந்தனர். இம்முறையாவது கடவுள் என்ற சர்வதேசத்தின் கண்கள் திறக்கட்டும் என்றும், சுதந்திர காற்றை தமிழர்கள் சுவாசிக்கும் காலம் விரைவில் வரும் என்றும் அவரது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று சந்திரநேரு அவர்களின் முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.









.jpg)



