சிவானந்தா தேசிய பாடசாலையின் சின்னஞ்சூட்டும் நிகழ்வு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு,கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் 2013ஆண்டு சாரணிய மாணவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் சாரணிய தலைவர்களான எஸ்.கதாரதன் மற்றும் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த சின்னஞ்சூட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் ஈ.பி.ஆனந்தராஜா கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ்,குருளை சாரண தலைவர் கே.சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது 24 மாணவர்களுக்கான சின்னங்கள் சூட்டப்பட்டதுடன் சத்தியப்பிரமாணங்களும் செய்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.