கரவெட்டி சமுர்த்தி வங்கி வலயத்தில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா


சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்து சமுர்த்தி வங்கிச் சங்கப் பிரிவு மட்டத்திலும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது.

இவ் விளையாட்டு  நிகழ்வு அண்மையில் மண்முனை மேற்கு - கரவெட்டி சமுர்த்தி வங்கி வலயப்பிரிவில் இடம்பெற்றது. ஈச்சந்தீவு கிராமத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமையாளர் எஸ்.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் P.குணரெட்ணம், மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.



மேலும் இதன்போது, வங்கிச் சங்க கட்டுப்பாட்டு சபையினர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின்போது சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சேமிப்புக்களை செய்த மக்களுக்கு சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது.