அமிர்தகழி - புன்னைச்சோலை சித்திவினாயகர் ஆலய தீர்த்தோற்சவம் - வீடியோ

(சுரேந்திக்கா)    அமிர்தகழி - புன்னைச்சோலை ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 16ம் திகதி ஆரம்பமாகியது. இறுதி நாளான  இன்று 25ம் திகதி தீர்த்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

வினாயகப் பெருமானின் தீர்த்தோற்சவம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் மிக சிறப்புடன்  இடம் பெற்றது, அதனைத் தொடர்ந்து பகல் 1.00மணியளவில் திருப் பொன்னூஞ்சல், பூசை நிகழ்வு இடம்பெற்றது. இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டு உற்சவம் இனிதே நிறைவு பெறுற்றது.