(கிருஸ்ணா)
வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியாகவும் உள்ள உன்னிச்சை பகுதிக்கான மின்விநியோகம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கோரிக்கைகளுக்கு அமைவாக கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் ஆரம்பிக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் திருமதி பேரின்பலர் மனோராஜ்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மகளிர் அமைப்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் இதனை ஆரம்பித்துவைத்தனர்.
இந்நிகழ்வில் மின்சாரசபையின் செங்கலடி பிராந்திய மின் அத்தியட்சர் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நான்கு கிராம சேவையாளர் பிரிவினை உள்ளடக்கியதாக சுமார் 01 கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் இந்த மின்விநியோகம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் இப்பகுதிகயை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.












