கலாநிதி அமலநாதனின் சிறுகடன் நூல்வெளியீட்டு நிகழ்வு


(கிருஸ்ணா)

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதனின் சிறுகடன் நூல் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

முதன்மை விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூல் ஆய்வுரையினை கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி என்.லோகேஸ்வரன் நிகழ்த்தினார்.

துறைசார் முதன்மைப்பிரதிகள் பெறுவோர் வரிசையில், கி.ப.கழக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமார், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித்திணைக்கள பணிப்பாளர் கே.அருந்தவராஜா,  அரச சார்பற்ற இணையத்தின் தலைவர் வ.கமலதாஸ், மூத்த எழுத்தாளர் அன்புமணி, வறுமை ஒழிப்பு நுண்கடத்திட்ட கிழக்கு மாகாண முகாமையாளர் மா.தயாபரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், நூல்வெளியீட்டுடன் புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.