இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ..கமலநாதன் -ஓராண்டு நினைவு கூரல் நிகழ்வு

இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ..கமலநாதனின் ஓராண்டு நினைவு கூரல் நிகழ்வு வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் சி மௌனகுரு தெரிவித்தார். நாளை வியாழக்கிழமை (போயா தினம்)அன்று காலை 10 மணிக்கு இலக்கம் 9,கொலட்வீதி , மட்டக்களப்பு விலாசத்திலுள்ள (பாஞ்சாலைக்கு அருகாமையில்) அரங்க ஆய்வு கூடத்தில் நடை பெறும் இந் நிகழ்வில், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியர் செ .யோகராசா ஆகியோர் உரையாற்றுகின்றனர். இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ..கமலநாதன் மட்டக்களப்பின் தமிழ் அறிஞர் வரிசையில் மிகமுக்கியமானவர். மட்டகளப்பு பூர்வ சரித்திரம், பாரத அம்மானை, போன்ற மட்டக்களப்பின் சரித்திர ஆவணங்களை ஏட்டிலிருந்து அச்சுக்கு மாற்றி மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்தவர். அத்துடன், பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்புக் கூத்துக்களை வெளியுலகுகின் பார்வைக்குக் கொணர்ந்த போதும்,அதனடியாக புதிய நாடகங்களான கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் ஆகிய நாடகங்களைத் தயாரித்த போதும் அவருக்கு வலது கரமாக நின்று செயற்பட்டு மட்டக்களப்பு கூத்துக்கலையை வெளியுலகறிய வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, அவர் மறைந்த ஓராண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக அரங்க ஆய்வு கூடம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர் மௌனகுரு அழைப்பு விடுத்துள்ளார்.