நாவற்குடா ஜீவ ஒளி விளையாட்டு கழகத்தின் கிராமிய விளையாட்டு விழா

வருடாந்த கிராமிய விளையாட்டு விழா கடந்த 25.04.2013 அன்று ஜீவ ஒளி விளையாட்டு கழக ஏற்பாட்டில் கழக தலைவர் வை. டினேஸ்குமார் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு அருண் தம்பிமுத்து (ஜனாதிபதி ஆலோசகர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு அமைப்பாளர்)  சாணக்கியன் (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பட்டிருப்பு அமைப்பாளர்) அருட் தந்தை ஜோன் அற்புதமணி (புனித மரியாள் ஆலயம் நாவற்குடா) முன்னாள் கழக தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சைக்கிள் ஓட்டம் ஆண் பெண் இருபாலாருக்கான மரதன் ஓட்டம் வழுக்கு மரம் ஏறுதல்  முட்டீ உடைத்தல்  கிடுகுபின்னுதல் சாக்கோட்டம் பணிஸ் சாப்பிடுதல் போன்ற பலதரப்பட்ட கிராமிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன