(கிருஸ்ணா)
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதனின் சிறுகடன் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25ஆம்திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறுகிறது.
முதன்மை விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீநிசாம், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் ஆய்வுரையினை கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி என்.லோகேஸ்வரன் நிகழ்த்துகிறார்.
துறைசார் முதன்மைப்பிரதிகள் பெறுவோர் வரிசையில், கி.ப.கழக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமார், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித்திணைக்கள பணிப்பாளர் கே.அருந்தவராஜா, அரச சார்பற்ற இணையத்தின் தலைவர் வ.கமலதாஸ், மூத்த எழுத்தாளர் அன்புமணி, வறுமை ஒழிப்பு நுண்கடன்த்திட்ட கிழக்கு மாகாண முகாமையாளர் மா.தயாபரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்வில், நூல்வெளியீட்டுடன் புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.













