அக்காலத்தில் இக்கலைகளை குருகுலவாச முறைப்படி கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இப்போது கலைகளைக் கற்றுக்கொடுக்கும் விதம் முழுமையாக மாற்றம் அடைந்துவிட்டது. நாட்டியத்துக்குப் பயன்படுத்தப்படும் ஒப்பனைமுறையை உற்றுநோக்குவோமானால் அன்று எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருட்களைக்கொண்டு ஒப்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒப்பனைமுறை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதனை கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது.
ஒப்பனைமுறை
அன்று
|
இன்று
|
|
முகம்
;
|
மஞ்சள்
|
பன்கேக்> பவுண்டேசன்> பிங்பவுடர்
|
கண்
;
|
கரி
|
ஐடக்ஸ்> ஐலைனர்> காஜல்> மஸ்கார்
|
வாய்
;
|
வேற்றிலைச் சாயம்
|
லிப்ஸ்டிக்> லிப்குலோஸ்> லிப்அவுட்லைனர்
|
கைகால்;
|
மருதாணி
|
சிவப்புச்சாயம்;
|
நெற்றி
|
குங்குமம்
|
ஸ்டிக்கர்பொட்டு
|
ஆபரணங்கள்
|
இயற்கையானவை
|
செயற்கையானவை
|
தலையில்வைக்கும்பூ
|
இயற்கையானவை
|
செயற்கையானவை
|
உடை
|
புடைவை
|
பஞ்சகச்சம்
|
மேலும் யோகக்கலைக்கும்> நாட்டியக்கலைக்கும் இடையில் மிகநெருக்கமானதொடர்பு இருக்கின்றது. யோகக்கலையானது ஏழுவகைச்சக்கரங்கள் பற்றிக்கூறுகின்றது. சக்கரங்கள் என்பவை ஆன்மீக ஆற்றலின் மையங்களாக கண்ணுக்குப் புலப்படாத சூக்சும உடலில் அமைந்துள்ளன. ஆனால் அவை சரீர உடலிலுள்ள தொடரமைப்புக்களோடு பொருந்துகின்றன.
மூலாதாரம்- இனவிருத்தி அவயத்தின் கீழ் அமைந்துள்ளது.
2. சுவாதிஸ்டானம்- அடிவயிற்றில் அமைந்துள்ளது.
3. மணிப்பு+ரகம்- வயிற்றில் தொப்பிளுக்கு அருகே அமைந்துள்ளது.
4. அநாகதம்- நெஞ்சுப்பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
5. விசுத்தி- தொண்டைக்குழியில் அமைந்துள்ளது.
6. ஆக்ஞா- புருவமத்தியில் அமைந்துள்ளது.
7. சகஸ்ராரம்- உச்சந்தலையில் அமைந்துள்ளது.
மனித உடலில் இருவகை நாடிகள் உள்ளன. வலதுபக்கம் உள்ள நாடியை சூரியநாடி என்றும் சந்திரநாடி என்றும் கூறுவர். இதனால்தானோ என்னவோ பரதநாட்டியத்தில் சூரியபிறை> சந்திரபிறையை தலையில் அணியும்போது சூரியநாடிப்பக்கம் சூரியபிறையையும்> சந்திரபிறையையும் சந்திரநாடிப்பக்கம் சந்திரபிறையையும் அணிவர்.
மேலும் சகஸ்ராரம் எனும் சக்கரத்தை ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரைக்கு ஒப்பிடுவர். நாட்டியத்தில் பயன்படுத்தப்படும்> தலையில் உச்சியில் அணியப்படும் ராக்கொடி எனும் ஆபரணம் தாமரை இதழ்களைக் கொண்டது போன்று வட்டவடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். அதனை தலையின் உச்சியில் சகஸ்ராரச் சக்கரத்தில் அணிவர். இது நாட்டியத்தின் உச்சநிலையை அதாவது ஆத்மாவை இறைவனுடன் இணைக்கும் தன்மையினைக் காட்டுகின்றது.
புருவமத்தியில் பொட்டிடுவது ஆக்ஞா சக்கரத்தின் செயற்பாட்டிற்கும், கழுத்தில் அணியும் அட்டியல் விசுத்தி சக்கரத்தின் செயற்பாட்டிற்கும் கழுத்தில் இருந்து மார்புவரை தொங்கவிடப்பட்டிருக்கும் பதக்கமாலை அநாகதச் சக்கரத்தின் செயற்பாட்டிற்கும் வயிற்றில் அணியப்படும் ஒட்டியாணம் மணிப்பு+ரகச் சக்கரத்தின் செயற்பாட்டிற்கும் பரதநாட்டிய உடையினை இடுப்பில் அடிவயிற்றில் கட்டுவது சுவாதிஸ்டான சக்கரத்தின் செயற்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும் நாட்டியத்தில் கடினமான பாதஅசைவுகளைத் தட்டுக்களைச் செய்யும் போது மூலாதாரச் சக்கரங்களும் அதிர்வுகளுக்குள்ளாகிச் செயற்படுத்தப்படுகின்றது.
யோகாசனங்கள் செய்யும் போது உடலிலுள்ள சக்கரங்களுக்கு பலம் கூடுவது போல் நடன அடவுகளைச்செய்யும் போதும் சக்கரங்கள் வலுப்பெறுகிறது.
1. மூலாதாரம், சுவாதிஸ்டான சக்கரங்கள்-
முழுமண்டியில் இருந்து செய்யப்படும் அடவுகளால் மூலாதாரச்சக்கரம் வலுப்பெறுகிறது. அதாவது மண்டிஅடவு> 2ம் தித்தெயும்த தாத்தெய் போன்ற அடவுகளாலும் மூலாதாரம் மற்றும் சுவாதிஸ்டான சக்கரங்களும் வலுப்பெறுகின்றன.
2. சுவாதிஸ்டானம் மணிப்புரகச்சக்கரங்கள்-
அரைமண்டியில் அல்லது சமபாதத்தில் நின்று குனிந்து செய்யும் அடவுகளால் சுவாதிஸ்டானம் மற்றும் மணிப்புரகச் சக்கரங்கள் வலு ஊட்டப்பெறுகிறது. உதாரணமாக 5ம்> 6ம்> 7ம்> 8ம் நாட்டடவுகளைக் கூறலாம்.
3. அநாகதசக்கரம்-
நெஞ்சப்பகுதி விரிவடைவது போன்ற அடவுகளைச் செய்யும் போது அநாகதச்சக்கரம் ஊட்டம் பெறுகிறது. உதாரணமாக 2ம் தெய்கத்தெய்கி> ததிங்கிணதொம்> கிடதகதரிகிடதொம் போன்ற அடவுகளைக்கூறலாம்.
4. ஆக்ஞா> சகஸ்ராரச்சக்கரங்கள்-
ஒரு உருப்படியினை ஆடும் போது காலில் தாளக்கணக்குகளுடனும் கையில் முத்திரைகள் அங்கசுத்தத்துடனும் முகத்தில் பாவஅபிநயம் போன்றவற்றை அவதானித்துச் செய்யவேண்டும். இதன் மூலம் ஆக்ஞா மற்றும் சகஸ்ராரச்சக்கரத்தினை செயல்படுத்தப்படுகின்றது. அதாவது
“ யதோ ஹஸ்த ததோ திருஷ்டி
யதோ திருஷ்டி ததோ மனஹ
யதோ மனஹ ததோ பாவ
யதோ பாவ ததோ ரசஹ”
எனும் நாட்டியக்கிரமத்தின் ஸ்லோகத்திற்கு இணங்க கைவழி கண்கள் செல்ல வேண்டும் கண்கள் சென்ற இடத்தில் மனம் லயிக்கவேண்டும். மனம் லயிக்கும் இடத்தில் பாவம் உண்டாகவேண்டும். பாவம் உண்டாகும் இடத்தில் ரஸம் உட்பத்தியாகும். எனவே நடனபாடுபவர் பாடலின் ஆழமான கருத்துடன் ஒன்றித்து அக்கருத்தின் கருவுடன் ஒன்றித்து அக்கருத்தின் கருவுடன் பார்வையாளர்களை லயிக்கச் செய்யவேண்டும். மேலும் கால்களில் பாதஅசைவுகளை தவறவிடாமல் தாளத்துடன் இணைத்துச் செய்யவேண்டும். முத்திரைகள் மூலமும் கருத்தினை கூறுதல் வேண்டும். இவ்வாறு ஒரேநேரத்தில் பல கோணத்தில் நடனமாடுபவர் இயங்கவேண்டும். எனவே நடனமானது யோகக்கலை செய்துபெறும் பலன்களுக்கு நிகராகின்றது. மேலும் நடனத்தின் மூலம் உடம்பிலுள்ள சக்கரங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இதனால் மகிழ்ச்சி> தன்னம்பிக்கை> ஆத்மபலன் போன்ற பல்வேறுபட்ட நன்மைகள் மனிதனுக்கு உண்டாகின்றது. மேலும் நோய் எதிர்ப்புசக்தி> நினைவுத்திறன்> கற்பனைத்திறன்> சிந்திக்கும்திறன் போன்றவை அதிகரிக்கின்றன.
இவ்விரு கலைகளும் நம் மனம்> உடல்> ஆன்மா ஆகிய மூன்றிலும் நன்மைகளை வளர்த்து தீமைகளைக் களையும் ஆத்மகலைகளாகும்.எனவே இவற்றினைப் பயின்று நன்மையடைவோமாக.
செல்வி;. வாசுகி குணரெட்ணம்
நடன ஆசிரியர்
மட்.புனித சிசிலியா பெண்கள் கல்லூரி













