முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடந்தகாலச் செயற்பாடுகளையும் அவர்களின் தமிழ் மக்களுக்கெதிரான காய் நகர்த்தல்களையும் உணர்ந்து செயற்படிவில்லையானால் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும் என்பது திண்ணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இன ஒற்றுமைக்கான நலன் விரும்பி என்ற தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பகிரங்க மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழுவடிவம்,
அன்புள்ள சம்பந்தர் ஐயாவுக்கு!
அண்மைக்காலமாக தாங்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையைத் தருகின்றன. இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சகோதரத்துவம் அன்னியோன்னியம் புரிந்துணர்வு சமாதானம் சகவாழ்வு என்பன இருக்க வேண்டும் என்பதில் நாமும் மிகுந்த பற்றுறுதி கொண்டுள்ளளோம்.
தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கில் ஒற்றுமை இன்றி வாழமுடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. எனவே முஸ்லிம் மக்களுடன் எமக்கு பகை உணர்வு எவையும் இல்லை. அவர்களுடன் ஒற்றுமையாகவே வாழ்கிறோம்.
ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை வேறாக உள்ளது. தமிழ் முஸ்லிம் இனவிரிசலை நோக்கியே அவர்கள் ஒவ்வொரு காய்களையும் நகர்த்தி வருகின்றனர். முதிர்ந்த அரசியல்வாதியும் அதுவும் கிழக்கு மண்ணைச் சேர்ந்தவருமான நீங்கள் இன்னமும் இதனைப் பரிந்து கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாகவுள்ளது. அல்லது புரிந்தும் புரியாமல் கருத்துக்கள் வெளியிடுகின்றீர்கள் என்ற சந்தேகமும் எமக்கு இல்லாமல் இல்லை.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் இன்னமும் தனி அந்தஸ்த்து உள்ள பிரதேச செயலகமாக தரம்உயர்த்தப்படவில்லை.பழமைவாய்ந்த கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையானது அஸ்ரப் வைத்தியசாலை போன்று அபிவிருத்தி செய்யப்படவில்லை. அங்கு கடமையாற்றும் வைத்திய அத்தியட்சகரின் அடாவடித்தனம் அதிகரித்துக் காண்டு போகிறது, இவற்றுக்கெல்லாம்முஸ்லிம் அரசியல்வாதிகளே காரணமானவர்களாவர்.
கிழக்குப் பகுதியில் ஒரு முஸ்லிம் தனது சொத்தை தமிழ் மக்களுக்கு விற்க முடியாது. அவ்வாறு விற்றால் அவர் பள்ளி வாயலில் அனுமதிக்கப்படமாட்டார். காத்தான்குடி - ஆரையம்பதி, மண்முனை வடக்கு - காத்தான்குடி எல்லைப்பிரச்சினை நீடித்துக் கொண்டே போகிறது. ஆரையம்பதி , மண்முனை வடக்கு தமிழ் பிரதேச நிலங்களை காத்தான்குடியுடன் இணைக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வாகரை பிரதேச தமிழ் பகுதி நிலங்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
இவற்றுக்கெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளே முற்று முழுதாக காரணமானவர்கள். யுத்த காலத்தில் தமிழர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும் போதும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை. அவர்கள் அரசுடன் இணைந்து கொண்டு சுக போகமும் அரசியல் லாபமும் அனுபவிக்கின்றனர். அரசியல் அதிகார பலத்தினால் தமிழர்களுக்கு எதிராகவே அனைத்துக் காய்களையும் நகர்த்தி அதில் வெற்றியும் பெறுகின்றனர்.
எனவே இவற்றை நாம் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இனிமேலாவது உணர்ந்து செயற்படுவீர்கள் என நம்புகிறோம். இல்லையேல் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும் என்பது திண்ணம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும் என சம்பந்தன் ஐயாவுக்கு பகிரங்கக் கடிதம்