( ச.சுரேந்திக்கா, மா.சசி) மண்முனை மேற்கு - புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கி வலயப்பிரிவில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இன்று 30ம் திகதி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமையாளர் கே.தில்லையம்பலம் அவர்களின் தலைமையில் தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கணக்காளர் எஸ்.புவனேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.ராமமூர்த்தி சமுர்த்தி முகாமையாளர் த.சத்தியசீலன், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.தமயந்தி, வங்கி கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் P.குமாரசாமி போன்றோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், இளைஞர் யுவதிகளுக்கான விளையாட்டுக்கள் முதியோருக்கான விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டில் பெற்றிபெற்றவர்களுக்கு வருகைதந்த அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வின்போது சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சேமிப்புக்களை செய்த மக்களுக்கு சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது.



























