புன்னைச்சோலை "கோப்ரா" விளையாட்டுக்கழகம் நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா


(சுரேந்திக்கா)    மட்டக்களப்பு - புன்னைச்சோலை கோப்ரா  விளையாட்டுக் கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டது.

இவ் விளையாட்டு விழா இன்று 28ம் திகதி புன்னைச்சோலையில் "கோப்ரா"  விளையாட்டுக் கழகத்தின் தலைவர் T.நந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய நிருவாகத்தின் தலைவர் சி.ஞானப்பு அவர்களும் முன்னணியில் நின்று செயற்பட்டார்.

இந் நிகழ்வு பல வருடங்களாக வருடா வருடம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி நடாத்தப்பட்டு வருகின்றது. இதன்போது கடந்த வருடம் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கும், தரம்-5 புலமைப் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இவ் விளையாட்டுப் போட்டியில் கலந்து வெற்றிபெற்ற வீரர், வீராங்னைகளுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.இந் நிகழ்வுக்கு புன்னைச்சோலை கிராம உத்தியோகத்தர் அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அரச உத்தியோகத்தர்கள், கழக உறுப்பினர்கள், ஆலய பூசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.