கல்முனை மரியா தெரேசா சர்வதேச கல்லூரியின் விளையாட்டுப்போட்டி.

கல்முனை மரியா தெரேசா சர்வதேச கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமையன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு போட்டியில்   பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் லவநாதன் அவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் விளையாட்டும், இல்ல குடில்களும் போட்டியை காண  வந்தோரின் கண்களை கவர்ந்திருந்தது.