அருட்தந்தை ஈ.ஜே.ஹேபர்ட் கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஹம்பாந்தோட்டை அணி வெற்றி

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நேற்று ஞாயிற்று;கிழமை மாலை நடைபெற்ற 2013ஆம் ஆண்டுக்கான அருட்தந்தை ஈ.ஜே.ஹேபர்ட் வெற்றிக்கேடயத்திற்கான கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஹம்பாந்தோட்டை அணி வெற்றி பெற்றது.


கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இக் கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், விமானப்படை அணி, இராணுவ அணி, யாழ். மாவட்ட அணி, அம்பாந்தோட்டை ஹால்டன், மட்டக்களப்பு மாவட்ட அணிகள் இரண்டு, புனித மிக்கேல் கல்லூரி அணி ஆகிய அணிகள் உட்பட 7 கூடைப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்டன. இறுதிப் போட்டியில், விமானப்படை அணியும், ஙம்பாந்தோடi; அணியும் மோதிக்கொண்டனன. இறுதிச் சுற்றில் 66-65 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஹம்பாந்தோட்டை அணியினர் வெற்றி பெற்றனர். இதன்படி முதல் இடத்தினை, ஹம்பாந்தோட்டை அணியும், இரண்டாம் இடத்தினை விமானப்படை அணியினரும், மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணியினரும் பெற்றுக் கொண்டனர். நேற்றைய இறுதி நாள் நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டு. மறைமாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும், எஹெட் கரிட்டாஸ் நிறுவன இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், புனித மிக்கேல் கல்லூரி அதிபர் திருமதி சி.எஸ்.மாசிலாமணி, அமெரிக்காவில் வசித்து வருபவரும் அருட்தந்தை ஈ.ஜே.ஹேபர்ட் இன் மாணவரும் கல்லூரியின் விளையாட்டுத்துறைக்கான நிதி வழங்குனருமாகிய டெஸ்மன் நடராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் கொழும்புக் கிளையும் இணைந்து நடத்தும் இக்கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் வெற்றியீட்டியருந்தமை குறிப்பிடத்தக்கது.