பாண்டிருப்பை சேர்ந்த மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம் !

கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தர்மலிங்கம் விஜய் (வயது 17) என்ற மாணவர் ஆற்றில் மூழ்கி மரணமானார். இன்று காலை நண்பர்களுடன் மத்திய முகாம் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் குளிக்கும் போதே இம்மரணம் சம்பவித்துள்ளது.

இவர் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் 2ம் ஆண்டு கணிதப்பிரிவில் கல்வி பயின்று வரும் மாணவர் ஆவார்.